பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை கட்டபொம்மன் கதை தற்போது பிரபலமாகியுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாகக் கட்டபொம்மனது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு சரித்திர நூல்களும், நாடகங்களும், ஆராய்ச்சி நூல்களும் பல வெளிவந்திருக்கின்றன. அவனுக்கு நினைவுச் சின்னங்கள் நாடு முழுவதிலும் எழுப்பப் படுகின்றன. சிப்பாய்ப் புரட்சியின் நூற்ருண்டு விழாவின் போது காட்டுவதற்கென்று எடுக்கப்பட்ட வரலாற்றுப் படத்தில் கட்ட பொம்மன் வரலாறு சேர்க்கப்படாது விட்டதைக் குறித்துக் கண்டனம் எழுந்தது. பின்னர் அக்கதையும் சேர்த்துக் கொள்ளப் பட்டது. வெள்ளையர் ஆட்சி பரவத் தொடங்கிய காலத்தில் அதனே எதிர்த்த வீரர்களுள் கட்டபொம்மன் தலைசிறந்தவனுகக் கருதப்படுகிருன். கட்டபொம்மன் பேராசைக்காரனென்றும் கொள்ளைக்கார னென்றும் ஒருவர் வர்ணித்திருககிருர், அவருக்கும் ஆதாரங்களில் லாமல் போகவில்லை. பூலுத்தேவர்தான் வெள்ளையரை எதிர்த்த முதல் விரரென்று நிலைநாட்ட அவர் முயன்றிருக்கிரு.ர். இவ்வாறு கட்டபொம்மனே தேசபக்தனென்று புகழ்பவர் களுக்கும், கொள்ளேக்காரனென்று இகழ்பவர்களுக்கும் ஒரேவித மான மூல ஆதாரங்கள் இருக்கின்றன. இருவருக்கும் தங்கள் கூற்றுக்களை நிரூபிப்பதற்கு கீழ்கண்ட நூல்களையே ஆதாரமாகக் கொள்கிரு.ர்கள். ஆரம் எழுதிய தட்சிண சரித்திரம்”, கர்னல்வெல்ஷ் எழுதிய "ராணுவ நடவடிக்கைகளின் ஞாபகங்கள்’ ஸ்டுவர்ட் எழுதிய *திருநெல்வேலி சரித்திரம்', தெல்லன் எழுதிய 'மதுரை சரித் திரம்", "டெய்லரது கையெழுத்துப் பிரதிகள்', 'திருநெல்வேலி கெஸ்ட்டியர்', 'மதுரை கெஸ்ட்டியர்', பேட்டின் 'திருநெல்வேலி சரித்திரம்' கிரான் எழுதிய 'பாளையக்காரர் யுத்தங்கள்', கால்டுவெல் எழுதிய 'திருநெல்வேலி சரித்திரம்' ஆகியவையே. ஆங்கிலேயர்கள் எழுதிய இந்த நூல்களையும், அவற்றை ஆதார மாகக் கொண்டு பிற்காலத்தில் எழுதப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம், திருநெல்வேலி சீமை சரித்திரம் போன்ற நூல்களில்