பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 சத்தியமாகவே கத்திப் போர் ரெத்தப்போர் இரத்தக் காடாகுமென் சாமியென்ருர் உத்தமன் இவ்விதம் சொல்லிடவே அப்போ ஊமைத்துரையுந் துடித்திடவே 550 கையைக் கடித்து உதறினரே ரெண்டு கண்களும் பொறி பறக்கத்தானே வையாபுரித் துரையை நினைத்தார் வெகு ஒய்யாரமாகவே தானெழுந்தார் தெய்வ உதவி நமக்குமுண்டு சக்க தேவி கிருபை நமக்குமுண்டும் செய்வதென்ன பின்னஞ் செய்வதென்ன அண்ணு சீக்கிரம் பயணமே செய்யுமென்ருர் பிறந்தன்னக்கே இறந்தகாயம்" பின்னம் பின்னே உயிர் வைத்து பார்க்கலாமா 560 கரந்த பாலையுங் காகங் குடியாது கட்டபொம்மு துரை பேரு சொன்னல் சுத்துராதி" நெஞ்சந் திடுக்கிடுமே துஷ்ட பேய்கள் பயப்படு.ே வெற்றியாகி வரலாகுமென்ருர் சுத்த வீரர்கள் சேரப் புறப்படென்ருர் பேட்டி காணப் பயணம் காயிதம் போட்டவன் சாகிசன் மேசாைக் கண்ணுகவே பார்த்திட வேணு மென்ருர் ஆயிரம் பேருஞ் சபாரி யென்ருர்ந்தச் சாகிசர் சமர்த்துகள் பார்போ மென்ருர் 570 பட்டத்துக் குதிரைக்குச் சீனிவைத்தார் பரி வைபோகி மட்டத்திலேற லுற்ருர் மெட்டுள்ள வெள்ளைக் குதிரையின் மேலேறி கட்டபொம்முதுரை சாரி செய்தார் திக்கு விசயன் சிவத்தையா முத்தையா தேசிவைபோகி மேலே நின்ருர் சக்க தேவி துணை யென்று பிரதானியும் தண்டிகை மீதினிலேறிக் கொண்டார் பாஞ்சைப்பதிக் கோட்டை விட்டகன்ருர் பெரும் பாதையைக் கூடி நடந்துசென்ருர் 580 வாஞ்சை உள்ள துரை மன்னவரும் மகுட வர்த்தனரும் வழிசென்றனராம்