பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணப்படும் விவரங்களையே இரு சாராரும் அடிப்படையாகக் கொள்ளுகின்றனர். மேற் குறிப்பிட்ட ஆசிரியர்களில் வெல்ஷ், பாஞ்சாலங்குறிச்சிப் போரில் நேரடியான தொடர்புடை யவர். கட்டபொம்மன் அவருடைய முக்கிய விரோதி. ஒய்வு பெற்று இந்தியாவை விட்டுச் சென்ற பிறகு அவர் தமது ஞாபகக் குறிப்புகளை எழுதினர். அவ்வாறு எழுதும்போது அவர் கட்டபொம்மனைப் பற்றி எத்தகைய கண்ணுேட்டம் கொண்டிருப்பார் என்று நாம் ஊகிக்க லாம். அவரைப்போலவே அவர் காலத்திலிருந்த அதிகாரிகளும், கும்பினி மேலதிகாரிகளுக்கு எழுதி அனுப்பிய அறிக்கைகளும் கட்டபொம்மன் மீது பகைமை உணர்ச்சியோடு எழுதப்பட்டன வாகவே இருந்திருக்க முடியும். இவற்றை ஆதாரமாகக் கொண்டு தான் பேட் தயாரித்த கெஸ்ட்டியர்களும், கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி சரித்திரமும், பேட் எழுதிய திருநெல்வேலி சரித் திரமும், நெல்ஸன் எழுதிய துரை சரித்திரமும் எழுதப்பட்டன. பிற்கால சரித்திர நூல்களும் வெள்ளைக்காரர்கள் மீது விசுவாச முள்ளவர்களாலேயே எழுதப்பட்டன. ஆகவே சரித்திர ஆதாரங்கள் என்று காட்டப்படும் விவரங்கள் எல்லாம், குறிப்பிட்ட சரித்திரக் கட்டத்தில் போராடிய இ பகுதியினருள் ஒரு பகுதியினர் தங்கள் நடவடிக்கைகளே நியாயம் என்று நிலைநாட்டுவதற்காக சேகரித்து வைத்த சம்பவச் செய்தி களே ஆகும். போராடிய மற்ருெரு பகுதியினர் இச்சம்பவங்களைப் பற்றி என்ன நினைத்தார்கள் என்பதைக் குறித்து அறிந்து கொள்ள எவ்வகைச் சான்றுகளும் விட்டுவைக்கப்படவில்லை. அவர்களுடைய ஞாபகத்தைப் பிற்காலத்தார் நினைவிலிலிருந்து அகற்றிவிடப் பாஞ்சாலங் கோட்டையை அழித்தது முதலே வெள்ளேக்கார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். கோட்டை பிடிபட்டதும் அதனை இடித்துத் தரைமட்டமாக்கி, உழுது இருந்த இடத்தின் மச்சம் கூடத் தெரியாமல் செய்துவிட்டனர். இக்காரியத்தை எட்டயபுரத்தாரைக் கொண்டே வெள்ளையர் நிறைவேற்றிக் கொண்டனர். கட்டபொம்மனது நெருங்கிய உறவினர் அனைவரையும் ஆளில்லாத தீவு ஒன்றுக்கு அனுப்பி வைத்தனர். பிற்காலச் சந்ததியார் கட்டபொம்மன் பரம்பரை யினர் என்று யாரையும் அழைக்கக் கூடாது என்பது அவர்க ளுடைய எண்ணம். கட்டபொம்மனின் மனைவியார் சக்கம்மாள் கோசுகுண்டு என்ற ஊரில் நம்பிக்கைக்குப் பாத்திரமான உறவினர் ஒருவரிடம் ஒப்படைத்திருந்த தங்க நகைகளையும், வெள்ளிப் பாத்திரங்களையும், செப்புப் பட்டயங்களையும் மேஜர் பானர்