பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 விதமான நிகழ்ச்சிகளிலிருந்து எப்படித் தரமுடியும்? சரித்திரச் சம்பவங்களை இவ்வாசிரியர்கள் காணும் முறையிலுள்ள வேறுபாடு g;stor (difference in methodology) @audi GoudyGr முடிவுகளுக்குக் காரணம். உதாரணமாக ஒரு ஆசிரி ய ர், "கட்டபொம்மன் தெலுங்கன், தெலுங்கர்கள் கோழைகள், சதிகாரர்கள்’ என்று முடிவு செய்துகொண்டு கட்டபொம்மன் வரலாற்றிலுள்ள சம்பவங்களைக் காண்பாராளுல் அவருக்கு அவருடைய முடிவை வலியுறுத்தும் சம்பவங்களே மனத்திற்படும். அவர் முடிவிற்கு விரோதமான சம்பவங்கள் மனதிற்படாது. இவ்வாறே கிருஷ்ண தேவராயர் தகப்பனைக் கொன்றவன் என்றும், நாகமநாயக்கர் ராஜத்துரோகி என்றும், ஆகையால் அவர்கள் பாஷையைப் பேசக் கூடிய கட்டபொம்மன் கருணையற்றவனாகவும், துரோகி யாகவும் இருப்பான் என்ற முடிவுக்கு வந்து விடுவார். வெள்ளை யர்கள் எழுதி வைத்த சான்றுகளைக் கொண்டு கட்டபொம்மன் கொள்ளைக்காரனென்ற முடிவுக்கும் வந்து விடுவார். இதற்கு எதிர் மாருகக் கட்டபொம்மன் நிகரற்றவீரன், தேசபக்தன் என்று முடிவு செய்து கொண்டு சரித்திரச் சம்பவங்களை நோக்கினல் அவனுடைய குறைபாடுகள் எதுவுமே கண்ணுக்குத் தெரியாமல் போய்விடும். இவை தவிர சரித்திரத்தைக் காணும் முறையிலும் வேறுபாடுகள் இருக்கின்றன. சரித்திரம் வீரர்களால் ஆக்கப் படுகிறது என்று சிலர் கருதுகிருர்கள். அவர்கள் தங்கள் கற்பனை யில் சரித்திர வீரர்களை சந்தர்ப்பத்துக்கும் சூழ்நிலைக்கும் அப்பாற் பட்டவர்களாக கருதுகிருர்கள். இருவருடைய கற்பனைகள் ஒன்று போலிரா. ஆகவே ஒருவர் யாரை வீரனுகக் கருதுகிருர்களோ அவனே மற்றவருக்குக் கோழையாகத் தோன்றலாம். ஆகவே இருவரும் தங்கள் தங்கள் வீரருக்காகக் கச்சை வரிந்து கட்டிக் கொண்டு சண்டை போடத் தொடங்குகின்றனர். சரித்திரத்தை இம்முறையிலெல்லாம் பார்ப்பது முழு உண்மையைக் காண்ப தாகாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் சரித்திர நிகழ்ச் சிகளைக் கண்டு தாங்கள் கண்டதே சரி என்று சாதிப்பது யானை பார்த்த குருடர் கதையாகவே இருக்கும். சரித்திரத்தையும், சரித்திர நிகழ்ச்சிகளையும், சரித்திர வீரர் களையும் சரியான முறையில் பார்ப்பதற்குச் சரித்திரக் கால கட்டத்தையும், அப்பொழுது இருந்த சமூக அமைப்பையும் அச் சமூகத்திலுள்ள பல்வேறு வர்க்கங்களின் தொடர்புகளையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் எந்த மனிதனும் ஒரு கலக் த்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் வாழ்கிருன். தொரு வர்க்கத்தைச் சேர்ந்தவகைத் ۔۔ جہٴ. * வர்க்