பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 தொப்பி கழற்றிச் சலாமுஞ் சொல்லிவர்மம் சொல்வானே தர்மத் துரைகளிடம் எப்படி ராச்சியம் ஆளவந்தீர் சீமை எங்கெங்கும் கொள்ளேயாய்ப் போச்சு தென்முர். தென்பாஞ்சைப் பதிக்கம்பளத்தான் நமது கும்பினியார் நெல்லைக் கொள்ளை கொண்டான். வம்புகளாகவே கொள்ளை கொண்டான், பாவி மட்டுக் கடங்காத துஷ்டனென்ருன். 223 () கொள்ளைக்காரர் வலு கம்பளத்தா ரங்கே கும்பினி ஆணையுமில்லை பென்ருர். பிள்ளை மகளுலே வந்த கொள்ளேயென்று பிற்கட்டு மேசருரைத்திடவே வல்லவளுகிய சென்னல் கர்னல் துரை மார்க்கமாய்ச் செய்திகள் தான் கேட்டு நல்லது நல்லது பாவி என்ருர் பல்லை நற நறென்று கடித்துச் சொல்வார். கட்டாமிராசுக் கோல் சன்னப் பிரவீச்சுக் ' கட்டபொம்மு வலு துஷ்டனுச்சு. £240 எட்டு நாளைக்குள் விசாரணை வைத்துமே துட்டு விலங்கிலடித் திடுவோம். சிந்தை கலங்காமல் கம்பளத்தார் நம்மள் சீமையில் கொள்ளை படித்ததில்ை இந்த விசாரணை செய்திடவே துரை எழுதிப் போட்டாரே காகிதமும் காயிதம் வந்ததே பாஞ்சைப் பதித்துரை கட்டபொம்மு பிரதானியிடம் தாகீதை " யாய் கும்பினிக் காயிதம் தள்ளி வைத்தான் கட்டபொம்முதுரை. 22.50 ஊமைத்துரை வீரபாண்டியனும் நெல்லே ஒருமிக்க வாரியே கொள்ளை கொண்டான். தாமதஞ் செய்யாமல் பாஞ்சைப் பதிவந்து சாவல் கட்டு விளையாட்டுகளும் சீரிய சந்தணப் பூச்சுகளும் தம்பி கெற்சிதமான கைவீச்சுகளும் ஊருக்கு மேற்கே" ஒத்தப்புளியிலே ஊமைத்துரையுட சாவல் கட்டும்