பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 பாளையம் வாரதைப் பார்த்தந்நேரம் அங்கே பாயும் புலி போலே சீறினுைம், வாளையெடுத்து துரை வெட்டினராம் கை வாளு வீச்சுகள் வீசினராம். 2370 அந்நேரங் கட்டபொம்மேந்திர துரை அங்கே யென்ன ஆலோசினே சொல்லினராம். மின்னலிடி போலே தோணு தென்ருர் அங்கே மென்மேலும் பாளையம் வருகுதென்ருர், கிழக்கே பார்த்தாலும் பட்டாளம் அங்கே கீழ்க்கடல் பொங்குதே பட்டாளம். தெற்கே பார்த்தாலும் பட்டாளம் அங்கே தென் கடல் பொங்குதே பட்டாளம். வடக்கே மேற்கேயே பார்த்தாலும் சுத்தி வளைந்து கொண்டதே பட்டாளம். 238 (? கடல் வெள்ளம் போலே தோணு தென்ருர் தம்பி கணங் கொள்ளாச் சேனவருகுதென்ருர். கோட்டையிலே சனம் இல்லையென்று வீரம் கூறினர் கட்டபொம்மேந்திர துரை. வேட்டை ரணவேட்டை யாடலாமென்றல்லோ வேந்தன் சிவத்தையா தானுரைத் தான் எத்தனை பட்டாளம் வந்தாலும் இங்கே ஏகமாய்ச் சுத்தி வளைத்தாலும் சத்திவளர் சக்கதேவி யம்மாளுக்குத் தான் பெலியாகக் கொடுத்திடலாம் 23.90 என்று சிவத்தையா சொல்லிடவே சபா சென்று கட்டபொம்மு ராசதுரை குன்றுமலை போலக்கொலு விருக்கச் சபை கூடி ஆலோசினை செய்திருக்க கும்பினிப் பட்டாள மேசரும் சோஷரும் கும்புகும்பாகத் தம்பூரடித்து கம்பளத்தார் கோட்டையெங்கே யெங்கே யென்று கும்புகும்பாகவே தான் திரண்டு மொட்டைப் பரம்பிலே தானேறி அங்கே முன்னூறு குதிரைகள் தான் வரவே 2400 பட்டாளமே சருமெட்டு மெட்டாகவே பாளையம் வந்து இறங்கினர்கள்,