பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 காலந்துரை வந்து சேர்ந்திடவே அது கம்பளத்தார் களறிந்திடவே, ஞாலம் புகழ் சித்திரமேடையிலே அங்கே நாட்டரசன் சபை செய்திருந்தார். சக்கதேவி கோவில் முன்பாக அங்கே சகல பேர்களு மன்பாக உக்ரமன் சிங்கே று கட்டபொம்மு துரை ஊமைத்துரையுங் கொலுவிருக்க 24 {} சின்னதளவாய் புலிகுத்தி நாய்க்கரும் செல்வன் சிவத்தையா முத்தையாவும் மன்னன் குமாரு தளவாயும் நல்ல மாப்பிள்ளை நாய்க்கர் வெள்ளையாவும் வில்லுறுதிக் காரர் வீரர்களும் நல்ல வேடபட்டித்துரை மன்னர்களும் சொல்லுறுதிக் காரச் சேவுகரும் நல்ல சுத்தவீரர் களனவோரும் செல்லத்துரை மக்கள் நல்லத்துரை மக்கள் சில்லவார் தோக்குல வார்களும் 24 20 வல்லமைக் காரரனே வோரும் ஒயில் வரிசையாகவே வந்தார்கள். ஒன்று போல சோமன் கட்டினர்கள் உருமாலுங் கட்டிச் சுங்கு விட்டார்கள். புனுகு சவாதுமே பொட்டணிந்தார் கடை கண்ணுக்கு மையுமே தானணித்தார். முத்துக் கடுக்கன் முகமிலங்க முத்து மோகனமாலை புய மிலங்க அஸ்த கடகங்கள் முன் கைமுதாரிகள் அணிந்தார் ராச துரத்தரர்கள் 24.30 மெட்டுகளாகவே கட்டபொம்மு துரை விஸ்தார மாகக் கொலுவிருக்க பட்டாளம் வந்ததைப் பாருமென்பார் கொள்ளைப் படை குருவி போல் தோணு தென்பார். சேவுகர் சேரத்திரளுமென்ருர் அதி சீக்கிரம் வேசீடைக் கெழும்பு மென்ருர்.