பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i { 実○ காவல்காரன் வெள்ளே புறப்படவே அப்போ காகமுங் கட்டிக் குறுக்கிடவே கவென்று பல்லி குழறு தென்ருள் தண்ணீர் குடித்த செம்பு தவறு தென்ருள் " 25 i Ö பாவி யொருகுரல் தானேயழுகிருள் பராசக்தி தேவி தானறிய, நாவல்காரன் மகன் வெள்ளையன் பெண் சாதி ஆவிபடபடென்று ஆடினுளாம். வண்டணி பூங்குழல் மாதரசி அவள் கண்ட சகுன விநோதங்களை சண்டைக்குப் போகவுங் கூடாதென்ருள். நான் கண்ட சகுனம் பொல்லாதென்ருள். இன்றைக்கு உன்னே இழந்தே னென்ருள். இனி என்றைக்குக் காண்பேனே வென்றழுதாள். 25.20 என்றவள் கையை ந்ெறித்தனளாம் மங்கை நின்று நெடுமூச்சுக் கொண்டனளாம். வல்லவன் வெள்ளையன் பெண்சாதி மனம் மருகிச் செய்திகள் ஏதுரைப்பாள்: பொல்லாத சொப்பனங்கண்டே னென்ருள் இப்போ போகாதே யென்று பின் தொடர்ந்தாள். வழக்குஞ் சொல்ல மனந்துணிந்தாள் மண வாளன் மடியைப் பிடித்திழுத்தாள். குளிக்க மஞ்சளரைத் தேனென்ருளது கொம்பன் கரியாகப் போச்சு தென்ருள் 罗530 கறிக்கு மஞ்சளரைத் தேனென்ருளது கன்னங்கரிபோலே போச்சு தென்ருள் நரிக்கொம்பு போலிருக்கு தென்முள் வெகு சுருக்குடனே யிப்போ போகாதே. வாழையுந் தோப்பு மழியக் கண்டேன் அய்யோ மல்லிகைப் பூவுங் கருகக் கண்டேன். பாழுராகவே போகக் கண்டேன் இந்தப் பாஞ்சை நகர மழியக் கண்டேன். கூந்தல் அவிழ்ந்து உலையக் கண்டேன். அய்யோ கொண்டையில் பூவுங்கருகக் கண்டேன். 2540 ஆந்தை அலறிவிழுகக் கண்டேன் ஒரு அநியாயக் கூகை குழறக் கண்டேன்.