பக்கம்:வீரபாண்டியம்.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

争14 வி ர பாண் டி ய ம் எங்கும் துயர் ஒலி 2210 இன்ன வண்ணம் துயரொலி எங்குமே மன்னி ஓங்க மறுகிப் புலம்பினர்: அன்ன வெங்கொடும் அல்லலேச் சொல்லவே உன்னின் உள்ளம் உருகி உலேயுமே. (III) யாவரும் கலங்கினர் 2211 கண்ட கண்டவர் கண்புடைத் தேங்கியே தொண்டை வீயத் துடித்தல மந்தனர்: மண்டி எங்கும் துயர்த்தி வளர்ந்தயல் உண்ட தோங்கி உருத்தெரி யாமலே. (112) பரிதாப நிலைகள் 2212 ஐய கோ! எனக் கூவி யலறுவார், தெய்வ மேயெனத் தேம்பித் தியங்குவார்: செய்வ தொன்றும் தெரிந்தில ராப்த்துயர் உப்தி யின்றி புலர்ந்து புரண்டனர். (113) ஊரும் காடும் உருகின 2 2 3. ஊரும் நாடும் உருகி மறுகின; யாரும் துன்ப அனலில் கருகிஞர்: பேரும் சிரும் பெருகி யிருந்தவர் பாருள் எங்கும் பரிந்து பதைத்தனர். (H4) கிடந்து புலம்பினுர் 2214 பிள்ளே செய்த பிழையால் பெருகியே வெள்ளேக் கூற்றம் விரைந்துடன் வந்துநம் தெள்ளு சீர்மன் சீனத் தின்றதென் றேங்கியே கிள்ளே வாயர் கிடந்து புலம்பினர். (II5) மறுகி உருகினர் 2215 விர மன்னன் விளிந்தன னேயினித் தாாம் இங்குத் தரிக்குங்கொலோ? என்பார்; ஆரும் அன்புடைத் தாயாம் அரசியும் பேர நேர்ந்ததே பேர்ந்திலமே யந்தோ ! (116)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/461&oldid=912987" இலிருந்து மீள்விக்கப்பட்டது