பக்கம்:வீரபாண்டியம்.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478 விர ப ா ண் டி யம் 2529 இனிச்செய்வது என்னே ! கோட்டை போயது குமரர்கள் சிறையிடைக் கிடந்து வாட்டம் மீறியே வல்விரைந் தேகினர்; என்ன ஒட்ட மாகவந் துடன் பிடித் திடநினேங் துற்ருேம் ஈட்டம் வேறதா யுள்ளதே! இனிச்செய்வ தென்னே! (31) 25.30 தெளிந்து சொன்னன். இன்று போரினே இயற்றிட இப்படை போதாது: ஒன்றி யூக்கிநாம் உடற்றின மாயினே, ஒருங்கே பொன்றி விழுவோம்; பொருதொழில் ஒழிந்துடன் மீண்டு சென்று தீர்தலே நலமெனத் தெளிவுடன் சொன்னன் (32). 2531 வெருவி அமர்ந்தார். கேட்ட யாவரும் நன்றென இசைந்தனர்; கிளர்ந்து மீட்டச் சேனேயை விரகுடன் எழுப்பிட விரைந்தார்: ஒட்டம் காட்டினே ஒன்னலர் வளேத்துடன் உருத்து வேட்டம் கொள்ளுவர் எனவுளம் வெருவினர் அமர்ந்தார். 253.2 திகில் மிகுந்தார். பொங்கி மூண்டுநேர் பொருதிடப் புகுந்தவர் போலத் தங்கு பாசறை சதுருடன் சமைத்தனர்; படைகள் எங்கும் தோற்றவே இருத்தினர் இனத்துடன் விழித்துச் சிங்க சொப்பன மாகவே திகில் மிகுந் திருந்தார், (34) 25.33 மீள நினைந்தார். உள்ளம் அஞ்சியும் புறத்தினில் உரமுடை யார்போல் கள்ள மாகவே கலந்தவர் இருந்தனர் கரந்து மெள்ள வேசெலும் வகையையும் வழியையும் விரைந்து கொள்ள வேயவர் குறிப்புடன் கூர்ந்தனர் ஒர்ந்தே. (35). 25.34 பாஞ்சையர் துணிந்தார். அண்ட கோளகை பிதிர்ந்திட அதிர்வெடி யிட்டுச் சண்டை செய்திட வந்தவர் சமரினே அஞ்சிக் கொண்டி ருக்கின்ற கோலத்தைக் கூர்ந்துன ராமல் மண்டி மேல்வரு வாரென இவர்மதித் திருந்தார். (36).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/525&oldid=913058" இலிருந்து மீள்விக்கப்பட்டது