பக்கம்:வீர காவியம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



97

மகப்பெறு படலம்


இயல் 43
வேல்விழியாள் கருக்கொண்டாள் என்றறிந்த வேழன் எனக் காண்மகவு பிறக்கு மென்ருன்.
மற்ருெருநாள் மாடத்துத் தனித்தி ருந்து
மாவின்காய் ஒன்றெடுத்துப் பாவை தின்ருள்; பற்றுடனே வேல்விழிபால் வந்த வேழன்
பார்த்ததனை நகைக்க அவள் மறைத்துக் கொண்டாள்; முற்றியநற் கனியிருக்கக் காயை வேண்டும்
முழுமதியை என்னென்பேன்' என்ரு கை, நெற்றியிலே பாதிமதி யுடையாள் இந்த
நேரத்தில் காயொன்றே இனிக்கும்' என்ருள். 182
கனியாத காயினிக்கும் நேர மொன்று
கண்டதிலை விந்தையிது வெனந கைத்தான்; இனிதாக மண்ணுடனே சாம்பர் தின்னும்
இந்நேரம் புளிப்பென்ன கைத்தா போகும்? தனியான இன்புலகில் இருவேம் மட்டும்
தனித்திருந்தோம் மகிழ்ந்திருந்தோம்; நமது காதற் கனியாக அன்புக்கோர் சின்ன மாகக்
காணுகின்றேன் என்வயிற்றில் மற்ருேர் ஆவி. 183

முழுமதி-பேரறிவு (நகைக் குறிப்பு). சாம்பர் - சாம்பல் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/100&oldid=911155" இலிருந்து மீள்விக்கப்பட்டது