பக்கம்:வீர காவியம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

98




தாயாகும் நிலையெனக்கு வாய்க்கும் பேறு
தந்தவற்கே சொல்லாமல் மறைத்து வைத்தேன் காயாமல் பொறுத்தருள்க' என்ருள் மங்கை;
களிப்பதனுற் பெருமுழக்கம் செய்தான் வேழன்; 'சேயாக ஒருமகனை எனக்க ளித்தாய்!
சிந்தைஎலாம் இனிக்கின்ற செய்தி சொன்னுய்! ஓயாத பெருவலியன் மற்ருேர் வீரன்
உலகத்தில் தோன்றுகின்ருன்! வீரங் காப்பான். 184
தந்தையென எனையாக்கும் இனிக்குஞ் செய்தி
தருவதற்கோ புளிக்கின்ற காயை யுண்டாய்? கந்துமிகும் மாவேழற் கிணையாய் நிற்கும் காளை நிகர் ஒருவீரன் எவனும் இல்லை; விந்தைமிகும் அவனுக்கே மகளுய் வந்தோன்
வீரத்தால் எதிராவான் என்று பாரில் எந்த முகம் நோக்கினுமே கேட்கச் செய்யும்
இணையில்லான் நின்வயிற்றில் வளரு கின்ருன். 185
மனக்கினியாய்! மாவீரன் வாழ்க என்றே
வாழ்த்துகிறேன்' எனtண்டும் முழங்கி நின்ருன்; 'சினக்களிற்றின் மிகுவலியோய்! கற்ப னைத்தேர்
செலுத்துவதில் வல்லாய் நீ! புரவி வாங்க நினைக்குமுனம் கசையொன்று வாங்கி விட்டாய்!
நெடிதுழன்று கருவுயிர்க்கா முன்னர் ஆண்தான் எனக்கழறிப் போர்மறவன் ஆக்கி விட்டாய்!
எதிர்காலக் கற்பனையில் கவிஞன் ஆளுய்! 186
காயாமல்-கோபிக்காமல். கந்து-வலிமை, கசை - சாட்டை.
எதிராவான்-ஒப்பாவான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/101&oldid=911157" இலிருந்து மீள்விக்கப்பட்டது