பக்கம்:வீர காவியம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101

மகப்பெறு படலம்




போர்க்களத்தில் தேரூர யானை ஏறப்
புரவிIசைப் பாய்ந்தேறப் பயிற்று வித்துப் பார்த்தலத்தில் இக்கலையில் இவனைப் போலப்
பார்த்ததிலை எனப்பகர வளரக் காண்பேன்; ஆர்க்கின்ற அரியேறு பலவந் தாலும்
அஞ்சாது பொருதழிக்கும் ஆற்றல் கொள்வான்; கார்க்களிற்றின் இடைப்புகுந்து துதிக்கை பற்றிக்
கரகரவென் றவன் கழற்றும் வலியன் ஆவான். 191
பண்டிளமைப் பருவத்தே எனது நாட்டில் பாய்மதமா வெறிகொள்ள மக்க ளஞ்சக் கண்டுடன் கைத் தண்டொடுசென் றதனைத் தாக்கிக்
கலங்கி அது நிலந்தனிலே வீழ்ந்து சாகக் கண்டவன் நான்; மைந்துடைய எனக்கு மைந்தன்
களங்களிலே எனவிஞ்சும் வலிய கிைத் தண்டுபல துண்டுபடப் பொருதுங் காட்சி
தனவாமல் கண்டுகண்டு மகிழ வேண்டும். 192
பெற்றெடுத்துப் புறங்காத்துப் பேணி, உள்ள ப்
பெட்புடனே வளர்ப்பதுநின் கடனே யாகும்; செற்றமொடு பொருகளத்து வீரர் தம்முட்
சீர்மைமிகு தலைவீரஞ் சான்ருேன் என்ன முற்றுபுகழ் பெற்றிடவே பயிற்று விக்கும்
முழுப்பொறுப்பும் எனக்கிருக்கும் கடனே யாகும்; கற்றபடி உற்றமர்கள் பலமு ருக்கிக்
களிறெறிதல் காளைக்குக் கடனேயாகும். 193
சிக்கிளிங்-மேகம்போன்ற யானை. தண்டு-போர்க்கருவி, சேனை. தணவாமல்-நீங்காமல். முருக்கி-அழித்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/104&oldid=911162" இலிருந்து மீள்விக்கப்பட்டது