பக்கம்:வீர காவியம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

102




வாள் பற்றிச் சுழன்றுகழன் றவன் போர் செய்ய வட்டமிடும் பொழுதத்தில் ஆர்ப்ப ரிப்பேன்; தோள் தட்டிக் கெக்கலிப்பேன்’ என்றே ஆர்த்தான்;
துய்யமணி மண்டபமே முழங்கிற் றம்மா! வேள்விட்ட பெருமுழக்கால் அஞ்சிப் பேறு
விளையுமுனம் இம்முழக்கா என்ருள் தோகை; "வாள்சுற்றும் போர்க்களத்தில் சீறும் போதும்
மகிழ்பொழுதும் ஆர்ப்பரித்தல் என்வ ழக்கம்; 194
அஞ்சல்விடு வஞ்சியொரு விர னுக்கே
அன்னையென ஆகிய நீ நடுங்கல் நன்ருே? கொஞ்சுமொழி மைந்தனுக்கு வீரப் பாலே
கொடுத்துமற மூட்டுவதுன் கடனே' என்ருன்; பஞ்சினுமெல் லடியுடையாள் அவன்சொற் கேட்டுப் 'பாவை என்றன் மணிவயிற்றில் வளரும் செல்வம் அஞ்சுகம்போல் பெண்ணுகப் பிறக்க வேண்டும்;
அகலாமல் என்வயமே இருக்க வேண்டும்'. 195
என்றவள்தன் மனத் தகத்தே எண்ணிக் கொண்டாள்;
இரும்பனைய மாவேழன் நாள்கள் எண்ணித் துன்றமரில் பொருதுவரும் மகனைக் காண த்
துயிலாத பெருங்கனவு கண்டி ருந்தான்; என்றுவரும் என்றுவரும் அந்த நன்குள்
எனவேங்கி இருவருமே நோக்கி நிற்க, ஒன்ருென்ருய் நாள்வளர உரிய காதல்
ஒளிவிளக்கம் அவள் வயிற்றில் வளர்ந்த தம்மா! 196
அஞ்சுகம் -- கி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/105&oldid=911164" இலிருந்து மீள்விக்கப்பட்டது