பக்கம்:வீர காவியம்.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

108
இயல் 48
பிரியாத் துணைவன் பிரிவால் வாடிப் புரியாத் துயரொடு புலம்பினள் வேல்விழி.
உயிர்தளிர்ப்பச் செய்திருந்த கொழுநன் இன்றவ்
வுயிர்தவிக்கச் செய்தகன்று சென்ரு கைப் பயிர்தவித்துத் துவள்வதுபோல் தளர்ந்தாள் நங்கை;
பாவையவள் பொழுதொன்று கழிவ தற்குள் மயல்பழுத்துப் படும்பாடு பெரும்பா டாகும்;
மனங்கவர்ந்த காதலனை நினைந்தி ரங்கும் மயிலவட்குத் துணைசெய்ய யாரே உள்ளார்?
மாதென்றும் பாராமல் பிரிவு கொல்லும். 208
தொடும்பொழுது மட்டுந்தான் தொடுவோர் தம்மைச் சுடுநெருப்பைக் கண்டதுண்டு; என்றன் வாழ்வில் விடும்பொழுது சுடுகின்ற நெருப்பொன் றுண்டு;
விந்தைமிகும் அவ்வொன்று காம மாகும்; அடும்பொழுதும் மெல்லியநன் மாத சைத்தான்
அளவின்றித் துயருறுத்தும் போலும் இந்தக் கெடுங்குண மேன்? கண்ணில்லை என்று மாந்தர்
கிளப்பதனுல் கருணையொன்று மில்லை போலும் 209
அடும் பொழுது-வருத்தும் பொழுது