உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வீர காவியம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111

மகப்பெறு படலம்




சிலபொழுது செயலிழந்து விழிகள் சோரும்: சிறிய ஒரு கனவுவரும்; கனவில் என்றன் குலமகனும் தொடவருவான்; ஆர்வத் தோடு
கொடுந்துயரைச் சொலஎழுவேன் மறைந்து போவான்; நலமழியும் என்தோளில் உறைந்தி ருப்பான்
நனவுடைய கனவதனில்; விழித்து நோக்கின் புலனறிய முடியாமல் நெஞ்சுக் குள்ளே
போய்ப்புகுந்து கொள்கின்ருன்; யாது செய்கேன்? 216
தென்றலுனக் கென்னபிழை செய்து விட்டேன்?
தியாக வீசுகின்ருய்; கொழுநர் ஓர் நாள் முன்றிலிடத் தருகிருந்து காதல் கொண்டென்
முகத்தெழிலைப் புகழுங்கால் நிற்ப ழித்தார் என்றதற்கோ முழுநிலவே நெருப்பே போல
எரிகின்ருய் சொரிகின்ருய் அனலை அள்ளி; கொன்ருெழித்தாற் குற்றமிலை கொல்லா தென்னைக்
குற்றுயிராக் கிடத்திடவோ விரைந்து வந்தாய்? 217
மருண்மாலைப் பொழுதே நீ அளிக்கத் தக்காய்;
மங்கும் நிலை உனக்களித்த மாயன் யாரோ? அருண்மாலை எனக்களித்த காதல் மன்னன் அயலாகிப் பிரிந்த தல்ை மங்கி என்றன் உருமாறி நிலைமாறிக் கலங்கு கின்றேன்;
உனக்கொருவன் இவ்வண்ணம் செய்தான் போலும்; பொருண் மாறித் தடுமாறி இவ்வா ருகப்
பொழுதெல்லாம் புலம்புவதே தொழிலாக் கொண்டாள்.

  • / 3

நிற்பழித்தார் - நின்னைப்பழித்தார். அளிக்க - இ. ங்க. அருள் மாலேஅன்புமயக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/114&oldid=911185" இலிருந்து மீள்விக்கப்பட்டது