பக்கம்:வீர காவியம்.pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



117

மகப்பெறு படலம்


காதலனைக் கூடுங்கால் இன் பங் கண்டாள்; கருவுற்ற நாள்முதலா உயிர்க்குங் காறும் வேதனைகள் பலகொண்டாள்; இன்ப துன்பம் வியனுலகில் மாறிவரும்; இயற்கை ஈதே; மாதவளும் துன்புற்ற பின்னே என்றும் மாருத இன்பத்தைப் பெற்றெ டுத்தாள்: போதவிழும் மலர்முகத்தாள் தாய்மை கொண்டாள் பூங்கொடியில் அரும்பொன்று பூக்கக் கண்டாள். 228 அன்புக்கோர் அறிகுறியாய்க் காதல் வாழ்வின் அரியதொரு விளைபயனுய்ப் பிரிவு தந்த துன்புக்கோர் அருமருந்தாய்ப் பிறந்த சேயைத் துணைவிழியால் அருள்பொழிய நோக்கிப் பெற்ற இன்புக்கோர் அளவில்லை; தாய்மை நெஞ்சம் இருப்பவர்க்கே அதுபுலனும்; மகிழ்வு ணர்ச்சி என்புக்குள் பாய்வதுபோல் உணர்வு கொண்டாள்; இடரனைத்தும் போயொழியப் பெற்ருள் அன்னை. 229 பெற்றமகன் தளிருடலைப் பஞ்சின் மென்மை பெற்றிருக்கும் கைவிரலால் பூப்போல் தொட்டுக் கற்றுணர்ந்த சான் ருேரின் பாட லுக்குள் கரந்திருக்கும் உட்பொருளை உணர்ந்தார் போல உற்றஒரு மகிழ்ச்சியினல் சொக்கிக் காதல் ஒள்வேலான் ஆண்மகனே பிறப்பான் என்று சொற்றசொலை மனத் தகத்து நினைத்துக் கொண்டு சூரனுக்கு வாழ்த்துரைத்தாள் தெ ழுதாள் அன்னை 230 S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S