பக்கம்:வீர காவியம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



வீரகாவியம்

118


இயல் 52 வேல்விழிக்குப் பெண்மகவு பிறந்த தென்று வேழனுக்கு வயத்தாசன் துாது விட்டான்! குலக்கொடியாம் தன் மகட்கு மகன்பி றக்கக் கூர்மகிழ்வு வயத்தரசன் கொண்டா னேனும் கலக்குறுத்தும் பெரும்பகையால் இரண்டு நாடும் கடும்போரில் ஈடுபட்டு நிற்ப தாலே பலர்க்குரைத்துத் திருநாள்கொண் டாட வில்லை; பாலகன் றன் வெள்ளணிநாட் சிறப்பை எல்லாம் இலக்கண நூற் பாவென்னச் சுருக்கிக் கொண்டான்; இன்பமெலாம் மறைபொருளா அடக்கிக் கொண்டான். ஒருமகளும் முதல்மகன்ருன் பிறக்கும் போழ்தே ஓராண்டுப் பருவத்தன் போலி ருந்தான்; நறுமலரின் மலர்ச்சிஎன முகம்ம லர்ந்து நாளெல்லாம் சிரித்திருக்கும் கார ணத்தால் முறுவலனென் ருெருபெயரால் அழைத்து வந்தார்; முன்பொழுதின் பின்பொழுது மேனி வண்ணம் பெருகிவர வளர்ந்துவர ஒளிமி குந்து பேரழகுப் பறழ்புலிபோல் வளர்ந்து வந்தான். 232 வெள்ளணி நாள் - பிறந்தநாள். முறுவலன் - புன்னகையுடையவன் பறழ்புலி-புலிக்குட்டி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/121&oldid=911201" இலிருந்து மீள்விக்கப்பட்டது