பக்கம்:வீர காவியம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121

மகப்பெறு படலம்


இயல் 53 வளர்மதி போல வளரும் முறுவலன் பலர் புகழ் கோளரிப் பட்டம் பெற்ருன். பகைகொண்ட இருநாடும் உருத்தெ ழுந்து பகைப்புலத்து நின்றுவரும் கார ணத்தால் முகைவிண்ட மலர் மாலை சூடும் நாளில் முன்னமவள் தந்தைக்குத் தந்த சொல்லால் தகைகொண்ட மாதரசி தந்தை நாட்டில் தன்கொண்கன் தருபிரிவின் துயரந் தாங்கி நகைகொண்ட முறுவலன்றன் முகமே நோக்கி நன்முல்லைப் பொருளுக்கோர் இலக்காய் நின்ருள். 238 வலியாலும் வடிவாலும் சிறிதும் அஞ்சா வகையாலும் வனப்பாலும் வாய்மு ழக்கும் ஒலியாலும் நடையாலும் சிறப்புற் ருேங்கி ஒப்பில்லா மாவேழற் கினையே யாகப் புலிபோலும் அவ்விளைஞன் மூன்ரும் நாளிற் பூத்துவரும் வளர்பிறைபோல் நாளும் நாளும் பொலிவோடு கலையோடு வளர்ந்து வந்தான்; பூரித்துப் புதுமகிழ்வு கொண்டா ளன்னை. 239 முகை விண் ட-அரும் பு விரிந்ந. கொண்கன்-கன வன். முல்லைப் பொருள்-முல்லைத் திணைக்குரிய உரிப்பொருள் (கணவனைப் பிரிந்து ஆற்றியிருத்தல்).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/124&oldid=911206" இலிருந்து மீள்விக்கப்பட்டது