பக்கம்:வீர காவியம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123

மகப்பெறு படலம்


மரஞ்செறிந்த காடடர்ந்து விளங்கி ஓங்கும் மலைச்சரிவில் இளைஞரொடு வேட்டம் போகி உரஞ்செறிந்த விலங்கினத்தை எதிர்த்துக் கொல்ல உவகையோடு திரிதருவான்; இவனைத் தாக்க முறஞ்செவிய களிறுகளும் முழக்கங் காட்டும் மொய்யுளைய அரியினமும் வருதல் காணின் குறிஞ்சியகம் எதிரொலிக்க இடிபோல் ஆர்த்துக் குதித்தவற்றின் மேற்பாய்ந்து கொன்று மீள்வான் 243 வேட்டைஎனிற் பெருவிருப்பம்; கான்வி லங்கின் வேந்தனெனில் தனிவிருப்பம்; முழக்கம் ஒன்று கேட்டுவிடின் உருமுழக்கம் இவனும் செய்வான்; கிளர்ந்தெழுவான்; ஆதலினல் இளைஞ ரெல்லாம் வேட்டெழுந்து படையென்னத் திரண்டு தம்முள் வீரனிவன் தலைவனெனத் தேர்ந்து கொண்டார்; காட்டுகின்ற பெருவலியால் கார்மு ழக்கால் கண்டவர்தாம் கோளரிஎன் றழைக்க லுற்ருர். 244 - _ மொய் உளைய-மொய்த்த பிடர்மயிரிகாயுடைய. குறிஞ்சியகம்-மலையகம், உரும் முழக்கம்-இடிமுழக்கம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/126&oldid=911210" இலிருந்து மீள்விக்கப்பட்டது