பக்கம்:வீர காவியம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125

மகப்பெறு படலம்


எனைமகவாப் பெற்ருனைக் காண்ப தென்ருே! என்றேனும் காணும் நிலை வாரா தேயோ? அனைவருமென் னிலைகண்டே எள்ளும் வண்ணம் ஆயிற்றே! ஆதரவாம் தந்தை யில்லாத் தனயனெனச் சொலும்பழியைப் பெற்றேன் அந்தோ தலைகவிழச் செய்தனரே! வீர மெல்லாம் முனைமழுங்கிப் பாழாக, வினயொன்! றிங்கே மூண்டெழுந்து துயர்ப்படுத்த வந்த் தேயோ?” 247 எனப்பலவும் கசிந்துருகிச் சொல்லி நையும் இளையவற்குத் தேற்றரவு சொல்லி, ஐய! தினைத்துணையும் நின்முகத்தில் துயரம் ஒன்றும் 左 தெரிந்ததில; இன்றதனை மதிழுத்தில் s பனைத்துணையாக் காண்கின்றேன்; என்றும் மாருப் பால்வண்ணச் சிரிப்பெங்கே? இந்தக் கோலம் உனக்கெதற்கு? விட்டுவிடு! பெற்ற பிள்ளை உறுதுயரம் பொறுக்குமுரம் இல்லேன்' என்ருள். 248 "தந்தைபெயர் தெரியாத மைந்து, க்குத் /4 தரையிலொரு பீடுநடை மகிழ்ச்சி ஏது? சிந்தை தனில் குழப்பங்கள் சூழும் போது சிரிப்பேது? வீரந்தான் விளைவ தேது? வெந்துயரம் துடைக்கஉனக் கெண்ணம் உண்டேல் விளைந்தவெலாம் மறைப்பின்றிச் சொல்க! இன்றேல் நொந்தழிய விட்டுவிடு! சாவ தற்கு நூறுவழி உண்டறிவேன்; என்ருன் மைந்தன். 249 -- _ தேற்றரவு - ஆறுதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/128&oldid=911214" இலிருந்து மீள்விக்கப்பட்டது