பக்கம்:வீர காவியம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

126


இயல் 55 மாவேழன் பெற்றமகன் என்ருள் அன்னை மைந்தனவன் சொலற் கரிய மகிழ்வு கொண்டான். கொன்றனைய இன்னுச்சொல் மற்றும் ஓர்கால் கூருதே நின்வாயால் என்று, தன்முன் நின்றவனை முகம்நோக்கி நெடிது யிர்த்து நீர்மல்கப் புகல்கின்ருள், என்றன் சேயே உன்றனையும் பிரிவதற்கோர் உள்ள மில்லேன் உண்மையினை மறைத்திருந்தேன் மற்ருென் றில்லை; நின்ருெளிரும் கதிரவனை இரவு வந்து நெடுநேரம் மறைத்தாலும் மறைந்தா போகும்? 250 தனக்குநிகர் எவருமிலாத் தறுகண் வீரன், தந்தை ஒரு பிள்ளையடா நீ; இப் பாரில் உனக்கெதற்குத் தலையிறக்கம்? பத் துத் திங்கள் உளைந்துளைந்து சுமந்துயிர்த்துப் பெற்றேன் உன்னை; மனக் கவலை ஏன்கொண்டாய்? உலகம் போற்றும் மதிப்பன்றிப் பழிப்பொன்றும் வாரா துன்பால்: சினக்களிற்றின் மகவுன்னைப் புகழ்வ தல்லாற் சிறிதேனும் எள்ளுதலுக் கிடமே இல்லை. 251

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/129&oldid=911216" இலிருந்து மீள்விக்கப்பட்டது