பக்கம்:வீர காவியம்.pdf/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131

மகப்பெறு படலம்


 எத்துனைதான் மறைத்தாலும் என்றன் போக்கால் என்றேனும் வெளிப்படுதல் திண்ணம்; காட்டை நத்துபுலிக் குட்டியின்பால் பூனைப் பண்பை
நயப்பதளுல் பயனில்லை; எனினும் என்றன் அத்தனைநான் காணும்வரை அடக்கிக் கொள்வேன்;
அன்னய்நீ அஞ்சற்க! திட்ட மிட்டே இத்தரையில் படைதிரட்டி வாகை சூடி
இணையாரும் இல்லைஎன வாழ்வேன் அம்மா! 263
மறஞ்செறிந்த நாவலத்து மாந்தர் தம்முள்
மனவலிமை மிக்காரைத் தேர்ந்தெ டுத்துப் புறஞ்செறிந்த துறையெல்லாம் பயிற்று வித்துப்
பூவேந்தர் அஞ்சவரு படைதி ரட்டி, உரஞ்செறிந்த மூவகத்தைத் தாக்கி, வீரர் ஓடோடப் புறங்கண்டு, நாட்டை ஆளும் திறமிழந்த மன்னவனும் மதலைக் கோவைச்
சிறைசெய்து, சொல்லரிய வென்றி கொள்வேன். 264
ஆர்த்தெழுந்த போர்த்திறத்தைக் காட்டிப் பெற்ற அரியணையை எனப்பெற்ற தந்தைக் கீந்து, சேர்த்துன்னை அவ்வணையில் அமரச் செய்து,
சேயென்றன் இருவிழியும் களிக்கக் காண்பேன்; பேர்த்தெழுந்து மூவகத்தின் துணையுங் கொண்டு பேரரசன் பெருங்கனகன் படையைத் தாக்கிக் கார்த்தொகையைக் கலைந்தோடச் செய்ய வல்ல
காற்றேபோல் கழன்றடித்து வெற்றி காண்பேன். 265

புறஞ்செறிந்ததுறை - போர்த்துறை. கார்த்தொகை - மேகக்கூட்டம்,