பக்கம்:வீர காவியம்.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

132


தந்தை ஒரு நாடாளத் தன்னே ரில்லாத் தனயனுெரு நாடாளப் பாரில் எங்கும் எந்த ஒரு பக்ையுமிலை என்று போற்ற இருகதிர்போல் ஒளிசெய்ய ஆட்சி செய்வோம்; முந்தைவரு மன்னரெலாம் விண்மீன் போல மொய்த்திருந்து பணிசெய்ய உலகம் எங்கள் சிந்தை தரும் குறிப்புணர்ந்தே இயங்கக் காண்பேன் சீரெல்லாங் குவிந்தொன்ருய் வயங்கக் காண்பேன். 266 இன்றே நான் என்பணியைத் தொடங்கு கின்றேன் ஏற்றதொரு வயப்புரவி எனக்கு வேண்டும்; குன்றேபோல் களிறனைய வலியும் பெற்றுக் கோளரியை விஞ்சுகின்ற வீரங் கொண்டு நின்றேறிப் பாய்புலிபோற் பாய்ந்து செல்லும் நீர்மையெலாம் அப்பரிபெற் றிலங்க வேண்டும்; சென்றே நான் வென்றிகொளச் சிந்தை கொண்ட செயலெல்லாம் நிறைவுபெற வேண்டும்' என்ருன் 267