பக்கம்:வீர காவியம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139

மகப்பெறு படலம்


தந்தையையும் மகனறியான்; தந்தை யும்தன் தனயனைக்கண் டறிந்ததிலை; அதனுற் போரில் உந்திஎழும் உணர்ச்சியினல் நேரில் மோத உடன்றெழுவர்; கிழமகனை வலித்துத் தாக்கி நொந்துவிழ அவன்மகனே செய்து நிற்பான்; நொடிப்பொழுதில் ஆர்ப்பரித்துக்கொன்றுந் தீர்ப்பான்; எந்தஒரு துயருமிலை மூவ கத்தை எளிதாகப் பணிவிப்போம் ஆட்சி கொள்வோம். 277 பின்னர் மகன் உண்மையுணர்ந் தெதிர்க்கு மாயின் பெரிதில்லை நமக்கவனை அழித்தொ ழித்தல்; முன்னமிவர் ஒருவரைமற் ருெருவர் தம்முள் முறைமையினை அறிந்துகொளா திருப்பி னன்ருே சொன்னவெலாம் நிறைவேறும்! புரிந்து கொள்ளின் தோன்றமரில் சமர் செய்ய வாரார்; நீவிர் சின்னஒரு துளியேனும் அறியா வண்ணம் சின்னவனைச் சூழ்திருத்தல் வேண்டும்' என்ருன். 278 மாமன்னன் எண்ணத்துக் குடந்தை யாக மாவலியும் தடவலியும் இசைந்தா சாகி, ஆமென்ன உறுதிமொழி தந்து நின்ருர்; அரசைெரு முடங்கல்வரைந் தவர் பால் தந்து, போமென்ன, அப்பணியைத் தலைமேற் கொண்டு போர்த்தலைவர் முறுவலன்பால் புக்கு நின்று கோமன்னன் தந்ததிரு வோலை தந்தார்; கோளரியும் விரித்ததனை நோக்க லுற்ருன். 279

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/142&oldid=911246" இலிருந்து மீள்விக்கப்பட்டது