பக்கம்:வீர காவியம்.pdf/144

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141

மகப்பெறு படலம்


இயல் 60 வெறியோ டெழுந்த வீரப் படையினர் வெண்ணகர்ப் புகுந்து விளைத்தனர் சமசே! பெருமன்னன் துணைபெற்ற மைந்தன் தன்னுள் பெருகிவரும் மகிழ்ச்சியினுல் நன்றி சொன்னன்; வருமுன்னம் இவனென்று நினைந்தான்; வெற்றி வாய்க்குமுனம் அவனென்று நினைந்தான்; ஆளுல் ஒருவன்றன் நினைவறிய முடிய வில்லை; உருத்தெழுங்கால் போரிலது தெரியும் நாளை; செருமுன்னி எழுபடைகள் இரண்டுஞ் சேர்ந்து சேயோனைப் பின்தொடர்ந்தே அப்பாற் சென்ற, 282 படகுகளால் புனலாற்றைக் கடந்து சென்று படையிரண்டும் அக்கரையைச் சார்ந்து, தீயிற் படமனைகள் பலவெரித்துக் கழனி யெல்லாம் பாழ்செய்து, மாந்தர்தமை அச்சு றுத்திப் படபடவென் ருர்ப்பெடுத்து நகருட் புக்க பாய்புலிகள் போலானுர் வீர ரெல்லாம்; அடகெடுக; வெறியொன்றே நிமிர்ந்தெ ழுந்தால் அழிவன்றி மற்ருென்றற் கிடமே யில்லை. 283 சேயேன்-இளைஞள்.