இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
147
மகப்பெறு படலம்
இயல் 64 கோளரியை எதிர்க்கவந்த கவச வீரன் கூர் வேலால் தாக்குண்டு தரையிற் சாய்ந்தான். வெண்ணகரில் செயல்வீரம் குறைந்த தேனும் விளம்புகிற சொல்வீரங் குறைய வில்லை; திண்ணியளும் வெண்கோடன் வந்து நேற்றுச் சிறையகத்து வதிகின்ருன் அமரில் தோற்று; பெண்ணனையான் இவன்வந்து வீரம் இன்று பேசுகின்ருன் வாய்கிழிய என்முன் நின்று; நண்ணிவரும் மானென்று புலியின் முன்னே நாடகங்கள் ஆடுவதைப் பாராய் இன்னே! 29.4 என்பரியைக் கொணர்கவென ஏறிக் கொண்டான் ஏறனைய கோளரியன்; கோட்டை வீரன், முன்பழியைத் தீர்ப்பதற்கே ஈண்டு வந்தேன்; முனைத்துவரும் என்பகழிக் கெதிரில் நிற்கத் தென்புனது நெஞ்சகத்து நிலைத்து நின்ருல் தெரிகணையை எதிர்தாங்கஃ தில்லை என்ருல் பின்புறவே ஓடிவிடு!" எனப்பு கன்று பெரும்பகழி பலதொடுத்தான் நாணிற் பூட்டி. 295 பகழி-அம்பு