பக்கம்:வீர காவியம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148


கார்முகத்தின் தாரையெனக் கனன்று சிந்தும் கார்முகத்தின் அம்புகளைத் தடுத்துத் தாங்க ஏர்முகத்தன் தடுமாறிக் குனிந்தும் சாய்ந்தும் இடையிடையே உடல்வளைந்தும் சுழன்றும் நின்ருன்; ஓர் முகத்தும் இவ்விளவல் இன்றே போல உறுதுயரம் அடைந்ததிலை; எனினும் அன்னுன் போர்முகத்துச் சலிக்கவிலை; புலிபோல் நின்று பொருமுறையைப்புகழ்ந்தவனைப்பொருது நின்ருன் 296 நெடும்பொழுது பொருததற்பின் காளை நெஞ்சம் நிமிர்ந்தெழுந்தான் கனன்றெழுந்தான்; வேலைத்துக்கி விடும்பொழுது வழக்கம்போல் முழக்கஞ் செய்து விட்டெறிந்தான்; பட்டதிர்ந்தான் எதிர்ந்த வீரன்; தொடுங்கவசம் கிழித்தகலம் தைத்த தவ்வேல்; துளைத் தழுந்தும் அதனை ஒரு கையாற் பற்றிப் பிடுங்கியவன் செங்குருதி சோர வீழ்ந்தான்; பீடுபடப் பொரவந்தோன் தரையிற் சாய்ந்தான் 297 கார்முகம்-1 மழை 2 வில் ஏர்-அழகு பிடு-பெருமை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/151&oldid=911265" இலிருந்து மீள்விக்கப்பட்டது