பக்கம்:வீர காவியம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

152

 பெண்ணோடு பொருதுயர்ந்தான் வெற்றி பெற்ருன் பிறங்குபுகழ் வீரமொடு கொண்டான் என்று மண்ணுடு சொலும் விருது பெறுவ தற்கோ மனம்வைத்தாய்; மாதென்னைச் சிறையில் வைக்க எண்ணுதே; விட்டுவிடு; நினதே வெற்றி; எங்கட்கும் பணிவதுதான் கடமை யாகும்; நண்ணுரென் றெண்ணுமல் இனிமேல் எங்கள் நகருக்குள் நீவருக! நலமே வாய்க்கும். 304 பொரவந்த வெண்கோடன் சிறையுற் றேகப் புதுத் தலைமை என் தந்தை பெற்ருர் அன்றே; கரவில்லை; முதியரவர் என்சொற் கேட்பர் கன்னிஎன்பேர் மானத்தி என்பர்; நெஞ்சில் உறவந்த நட்புறவால் என்பின் வந்தால் உரியதொரு கோட்டையினை ஒப்ப டைப்பேன்; பிறகிந்தச் சமரெதற்கு வாவா என்று பெடைக்குயிலின் இனியகுரல்கொண்டுசொன் னுள். 305 அவளெய்த வில்லம்பு தடுத்து நின்ருேன் ஆயிழையின் விழியம்பு தடுக்க லாற்ருன்; தவளநகைப் பொலிவுடனே இனிய சொல்லும், தனிநடையும், கொடியிடையும், நயஞ்செ றிந்து தவழுமொழி வாயழகும், வீரப் போக்கும் தறுகணுறுங் கோளரியை வென்று நிற்க, இவனுமவ ளுடன் செல்ல இயைந்தா கிை எழில்வீரக் குலமகள்பாற் சிலசொல் சொல்வான். 306 பிறங்கு-விளங்கு. விருது-சிறப்பு. கரவு-வஞ்சனை. தவளம்-வெண்டிை, தறுகண் -அஞ்சாமை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/155&oldid=911272" இலிருந்து மீள்விக்கப்பட்டது