பக்கம்:வீர காவியம்.pdf/156

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153

மகப்பெறு படலம்

 மறவர்குலப் பூங்கொம்பே! நயந்து சொல்லும் மாற்றத்தை நம்புகிறேன்; மாற்றம் செய்யேல்; சிறகிழந்த பறவைஎன நிற்கு முன்னைச் சிறைதவிர்த்தேன் சொன்னசொலைக் காத்தல்வேண்டும் உறநிவந்த கோட்டையினை அட்டி யின்றி ஒப்படைத்துச் சொற்கேட்டுப் பணிதல் வேண்டும்; பிறழுநிலை தென்படுமேல் எனது சீற்றம் பேரழிவைச் செய்துவிடும் எழுக' என்ருன். 307 以 மாற்றம்-சொல். மாற்றம்-மாறு:டு. உறநிவந்த-மிகஉயர்ந்த