பக்கம்:வீர காவியம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

156

 நரிகண்டு பின்வாங்கச் சூழ்ச்சி செய்த நயவஞ்சப் பேய்மகளே! என்றன் நெஞ்சை வெறிகொள்ளச் செய்துவிட்டாய்! நாளை நேரும் விளைவுகளை உணராமல் விதைத்து விட்டாய்! கரிகொண்டு பரிகொண்டு படைகள் கொண்டு காத்தாலும் என்சினத்தைத் தடுக்கல் ஆற்ருய்! எரிகொண்டு வாயிலெலாம் தீயும்; எங்கள் இடிகொண்டு கோட்டைஎலாம் சாயும்' என்ருன்.. 312 சினந்துரைத்த மொழியெல்லாம் கேட்ட நங்கை செவ்வாயிற் கலகலெனச் சிரித்து நின்று, 'தனந்தனியாய் நிற்கின்ருேய்! உனது நாட்டில் தனக்குநிகர் இலையென்று தருக்க லாகும்; வனந்திரியும் களிறனையான், எங்கள் நாட்டு வாள்வீரன், படைத்தலைவன், உடன்றெ ழுந்தால் இனந்தெரிய ஒண்ணுமல் உடலைக் கீறி எடுத்தெறிவன் உயிர்தப்பிப் பிழைத்துப் போபோ! 313 வென்றுவிட மனப்பால்நீ பருகு கின்ருய்! விளையாட்டுப் பிள்ளை யென மறுகி நின்ருய்! குன்றனையான் வெகுண்டெழுமேல் வீர ரெல்லாம் குற்றுயிராய்க் கையிழந்து காலி ழந்து பொன்றுநிலை எய்திடுவர் அந்தோ! நீ தான் புறங்கொடுத்து மீள்வைஎனில் உயிர்கள் தப்பும்; சென்றுபிழை என்றவளும் எள்ளி நின்ருள்; சினமடங்கல் குமுறலுக்கோர் அளவே யில்லை. 314 தனந்தனியாய்-தன்னந்தனியாகி, மீள் வை-மீள் வாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/159&oldid=911280" இலிருந்து மீள்விக்கப்பட்டது