பக்கம்:வீர காவியம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

காட்சிப் படலம்

படைத்தலைமை ஏற்றுள்ளோர் தனித்தி றத்தால்
      பயிற்சிமிகு போர்த்திறத்தால் வெற்றி தோல்வி
படைத்திடுதல் இருபுறத்தும் மாறி மாறிப்
      பகலிரவு சுழல்வதுபோல் இங்கு மங்கும்
அடிக்கடிசென் றலமந்து திரியும் மீளும்;
      ஆதலினால் ஒருநாட்டில் ஏற்றங் காணும்;
கிடைத்ததுவும் மறுநாளில் மாற்றங் காணும்;
      கீழ்மேலாய் மேல்கீழாய்ச் சுழலும் நாடே.9

-------------------

அலமந்து - சுழன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/16&oldid=1354167" இலிருந்து மீள்விக்கப்பட்டது