பக்கம்:வீர காவியம்.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

158


இயல் 69 கோளரியின் வஞ்சினத்தைக் கேட்டோர் அஞ்சிக் கூடியொரு சுருங்கைவழி தப்பிச் சென்ருர். வெஞ்சினத்தான் வெகுண்டுரைத்த வஞ்சி னத்து வீரமொழி மானத்தி தந்தைக் கெட்ட, அஞ்சுளத்து முதியனவன் காளை நாளை அணுகுமுனம் வழிதேட வேண்டு மென்று நெஞ்சகத்துச் சிந்தித்தான் வழியுங் கண்டான்; நினைத்தவெலாம் தொகுத்தொருங்கே வரைந்த ஒலை கஞ்சுகத்து மறவன்பால் தந்து, நாட்டுக் காவலன் பால் தருகவெனப் பணித்த பின்னர், 316 மற்றவரை அழைப்பித்து நிலைமை கூறி, மாற்றலர்பாற் சிக்காமல் தப்பிச் செல்ல உற்றதொரு சுருங்கைவழி புக்குச் செல்லின் ஊர்கடந்து மூவகத்தை அடைத லாகும்; சொற்றபடி வஞ்சினத்தை முடிக்கும் ஆற்றல் சூரன்பால் உளதறிவீர்; இதை விடுத்தால் முற்றுமழிந் தொழிந்திடுதல் உறுதி' என்ருன்; மொழியுமுனம் எல்லாரும் சுருங்கை புக்கார். 317 வஞ்சினம்-சபதம். அஞ்சுளம்-அஞ்சும் உள்ளம். கஞ்சுகம் -சட்டை நாட்டுக்காவலன்-மதலேக்கோ. சுருங்கை-சுரங்கம்.