பக்கம்:வீர காவியம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

162


தலைவனெண் உனை நம்பி வந்தோம்; இங்குத் தரியலர்தம் நாட்டழகி ஒருத்திக் காக அலையுமனம் நீகொண்டாய்! மூவ கத்தை அருஞ்சமரில் வென்றுவிடின் அதன்மேல் நீதான் கலையுலகம் புகுந்திடலாம்; காதல் வாழ்வில் களித்திருந்து திளைத்திடலாம்; தடுப்பா ரில்லை; மலைவரிய கோளரியின் வீர மெல்லாம், மாண்பெல்லாம் வீணுகப் போதல் நன்ருே? 324 வீரந்தான் விரும்புதியோ? காதல் ஒன்றே மேலாக விழைந்தனையோ? இரண்டில் ஒன்றைத் தேருங்கால் மற்ருென்றை விடுதல் வேண்டும்; சேயிழையின் காதலொன்றே வேண்டு மென்ருல் பாரஞ்சும் கைவாளைத் தரையில் வீசு! பணிந்துவிடு மாற்றலர்க்கு! வீர மென்ரு ல் போரஞ்சாத் திறல்காட்டு வாளைத் தூக்கு! புகல்மறவன் கோளரியின் பெயரை நாட்டு!” 325 — == மலே வரிய-எதிர்க்கமுடியாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/165&oldid=911294" இலிருந்து மீள்விக்கப்பட்டது