பக்கம்:வீர காவியம்.pdf/168

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165

மகப்பெறு படலம்


வயந்த நகர்ப் பெருவீரன் தனித்துச் செய்யும் வாட்போரில் முன்னிற்க எவரும் இல்லை; நயந்திருக்கும் அவனுருவம் ஆற்றல் எல்லாம் நம்நாட்டு மாவேழன் தனை நி கர்க்கும் வயல்கொழிக்கும் வெண் கோடன் போரில் தோற்று வலிவிழந்து சிறைப்பட்டான் என்ருல் பாரோர் வியந்திருக்கும் பெருவீரன் வலிமை எல்லாம் விளம்புதற்கு யார் வல்லார்? எவரு மில்லை! 330 மீளியிவன் எதிர் நிற்கும் ஆற்ற லுள்ளார் வேழனன்றி ஒருவரிலர்; கோட்டை தன்னை நாளையழித் தொழிப்பனென வஞ்சி னத்தான் நவின்றுள்ளான்; வேழனும்வந் துதவி செய்ய வேளையிது போதாது; வீரன் வந்து விடலையொடு பொருவனெனக் காத்து நிற்பின் ஆளியிவன் வாளுக்கே இரையாய் வீழ்வோம்; ஆதலினுல் சுருங்கைவழி தப்பி விட்டோம்'. 331 வயம் - வெற்றி. மீளி - வீரன். விடலை - தலைவனுகிய கோரி, ஆளி-சிங்கம் போன்ற விலங்கனைய கோளரி. -