பக்கம்:வீர காவியம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

166


இயல் 74 வேழ?ன அழைத்து விரைவினில் வருகென ஆளி:ன மன்னன் அனுப்பினன் துடித்தே. முடங்கல் தரும் செய்தி எலாம் படிக்கக் கேட்டு முனிந்தெழுந்த மதலைக்கோ, எதிர்த்து வந்த அடங்கலரை ஒழிப்பதினி எவ்வா றென்றே அமைச்சர் படைத் தலைவரையும் வினவி நின்ருன்: 'மடங்கலினை நிகர்ப்பானை அடக்க வேண்டின் மாவேழன் ஒருவன்தான் தக்கான் என்ருர்; தடங்கலின்றி வலிமைமிகு வேழன் இன்று தண்டலத்தில் உறைகின்ருன்' என்று சொன்னர். 332 மாமன்னன் தூதுவரை விரைந்து கூவி மாவேழற் கொணர்களனப் பணித்து நின்று, கோமன்னன் நாவலத்தான் போர் தொ டுத்தான்; குமரைெரு சிறுமகனே தலைமை பூண்டான்; நாமன்னும் வெண்கோட்டை பற்றிக் கொண்டான்; நல்வலிமைக் கோடனையும் சிறையில் வைத்தான்; ஏமன் னும் வில்லானுக் கெல்லாம் சொல்லி இப்பொழுதே கொணர்கவென ஏவி விட்டான். 333 -- அடங்கலர் - பகைவர். மடங்கல் - சிங்கம். தண்டல ம் - வே ழன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/169&oldid=911302" இலிருந்து மீள்விக்கப்பட்டது