உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வீர காவியம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

172


இயல் 78 விரைந்து வந்திலன் வேழன் என்ருங்கு எரிந்து சிறைசெய ஏவினன் மன்னன். என்றுவரும் என்றுவரும் சென்ற வீரன் என்றேங்கும் மன்னவன்முன் வந்த தூதன் நின்றரசன் தாள் பணிந்து வேழன் இங்கு நேரலரைப் பொருதொழிக்கச் சீற்றங் கொண்டே ஒன்றிவுளி மீதேறி வருகின் ரு'னென் றுரைத்தமொழி கேட்டுளத்துச் சினந்த வேந்தன் 'நன்றியிலன் என் சொல்லைப் புறக்க னித்தோ நாள் கடந்து வருகின்ருன் நாயிற் கீழோன். 3.45 மதித்திருப்பின் இத்துணைநாள் தாழ்த்தல் செய்யான் வாளொன்று கொண்டவனை வீழ்த்த போதும் கொதித்திருக்கும் எனது மன மாரு தென்ருன்; கொற்றவன்றன் சொற்கேட்டுத் துாதன் ருனும், மதித்துரைக்கும் அமைச்சவையும், ஆயத் தாரும், மற்றுள்ள குழுவினரும் வருந்தி நின்ருர்; எதிர்ப்பிருக்கும் இவ்வேளை மன்னன் சொன்ன இழிமொழிகள் கேட்டுளத்தில் வெறுப்புங் கொண்டார். இவுளி-குதிரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/175&oldid=911316" இலிருந்து மீள்விக்கப்பட்டது