இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
173
மகப்பெறு படலம்
குன்ருெத்த திண்டோளான் கவசம் பூண்ட கொலைவேலான் மாவேழன், வேந்தன் ஆட்சி மன்றத்துட் பீடுநடை யோடு வந்து மன்னவனைப் பணிந்திறைஞ்சி நின்ருன்; உள்ளம் கன்றத்தன் சினங்காட்டி ம.தலைக் கோமான் காலந்தாழ்த் திங்குவரும் இவனைக் கொண்டு சென்றந்தக் கொட்டிலுக்குள் அடைக்க' என்று திறமிக்க காவலனுக் கானை யிட்டான். 347