175
மகப்பெறு படலம்
நாட்டின் பால் கொண்ட தொரு வேட்கை யாலுன்
நன்றியிலாச் செயலெல்லாம் பொறுத்து வந்தேன்; மாட்டின் பால் கறக்காமல் பயனே நல்கும்
மடியறுக்க முனைகின்ருய்! என நீ யாட்டும் ஆட்டம்போல் அடங்கியுனக் காடி நின்றேன்;
அஞ்சியன்று; தாய்நாடு போற்றும் ஆசை: வாட்டும்போ தடங்குவதால் மன்ன! என்றன்
வலிமைஎலாம் ஓர்ந்திலையோ? உணர்வாய் நாளை. 350
பொங்காமல் பொங்கிவரும் சீற்றங் கொண்டு
புரிந்தெழுந்து கைப்பற்ற நான் நி னைத்தால் செங்கோலும் மணிமுடியும் நீய மர்ந்து
சீரிழந்த அரியணையும் என்பாற் சேரும்; வெங்கோல! அரசிருக்கை கொள்ளும் ஆசை
விளைகின்ற தினையளவும் என்பால் இல்லை; இங்காளும் அரசர்க்குப் பணிந்து போதல்
என் போன்ருர் கடமைஎன அடங்கி நின்றேன். 351
முரசறைந்து போர்தொடுத்துப் பகைவன் வந்து முறுக்குங்கால் ஆற்ருமல் தோல்வி கண்டே அரசிழந்து நாடிழந்து செல்வம் நீங்கி
அடவிதனில் கோவூரன் அலையுங் காலைப் பொர நினைந்தவ் வூரனுக்குச் சார்பாய் நின்று
புகுந்தபகை கெட்டொழிய வாகை சூடி அரிநிவந்த இருக்கையினை அவனுக் கீந்தே
அணிமுடியும் கவித்ததை நீ அறியாய் கொல்லோ? 352
SS S S S T T TTT T S T T T T S T S T T