பக்கம்:வீர காவியம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

காட்சிப் படலம்

கூர்வேலும் வாய்வாளும் பகையைத் தாக்கிக்
      குவிக்கின்ற உடலங்கள் சிந்தும் செந்நீர்
பார்மேவி ஒன்றாகி ஓடும் ஆற்றின்
      பரப்பதுவே அவன்குதித்து நீந்தும் வெள்ளம்;
ஏர்போலும் ஒருகருவி இடித்துத் தாக்கி
      எழுகின்ற கூக்குரலே யாழின் பாட்டு;
சேர்காலை இருவாளும் எழுப்பும் ஓசை
      செவிக்கினிய முழவோசை அவனுக் காகும். 9

ஆடரங்கம் போர்க்களமே அவனுக் காகும்
      ஆர்த்துவரும் மறப்படைகள் பொம்மை யாகும்;
கூடரங்கில் வெட்டுண்ட பகைப்பு லத்தார்
      குறையுடலம் எழுந்தெழுந்து குதிக்குங் காட்சி
நாடகங்கள் போலவற்கு மகிழ்ச்சி நல்கும்;
      நாளெல்லாம் இஃதொன்றே தொழிலாக் கொண்டு
நாடனைத்தும் பணிவித்தான்; மூவ கத்தின்
      நற்பெயரே மிகுவித்தான்; புகழ்கு வித்தான். 10


பார் - நிலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/18&oldid=1354169" இலிருந்து மீள்விக்கப்பட்டது