பக்கம்:வீர காவியம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

178


அனையனுரை கேட்டுளத்தில் புலந்து செல்லின் அறிவுடைய நினக்கிதுதான் அழகோ? நாட்டை முனைநுனியில் விடுப்பதுதான் முறையோ? உன்னை முழுமையுடன் நம்புமெமைத் தவிக்கச் செய்தல் தினையளவும் நலமாமோ? நீயே யன்றித் தெறுபகையை எதிர்க்கவலார் யாரோ உள்ளார்? எனையுணர வல்லாய் நீ! வீர ரெல்லாம் இறந்தொழியக் கருதினையேல் செல்க இன்றே! 357 மன்னவன்பால் வெறுப்புற்ற ஒன்ருல் வேழன் மாற்றலர்க்குத் தாயகத்தை விட்டான் என்று சொன்ன மொழி கேட்பதற்கோ செவிகள் கொண்டேன்; சூரனினும் உயிருடனே வாழும் போதோ பன்னரிய புகழ்நாடு பணிதல் வேண்டும்? பாரெல்லாம் வென்றவன்தான் வேழன் இன்று முன்னமரில் போர்செய்ய வலிமை யின்றி முதுமைநிலை எய்தினனென் றுலகம் சொல்லும். 358 தாயகத்துப் பற்றிருப்பின் நினது சீற்றம் தணிந்தெழுந்து செருமுகத்துச் சீறிச் செல்க! போயகத்து வாழ்வதொன்றே குறியாம் என்ருல் புலம்பிவரும் என்மொழியை மீறிச் செல்க! காயமுற்ற எழில்முகத்து வேழன் சென்ற கள மெல்லாம் வென்றுவந்தான் இன்ருே எங்கள் சியமொத்த சிறும கற்கே அஞ்சி விட்டான் சென்றுவிட்டான் என்றுலகம் துாற்றும் என்ருர், 359 _ா_ _ புலந்து-ஊ + முனே -போர் முனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/181&oldid=911330" இலிருந்து மீள்விக்கப்பட்டது