பக்கம்:வீர காவியம்.pdf/187

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

184


இயல் 83 பாசறைகள் இருபாலும் அமைந்த பின்னர்ப் பகைப்புலத்துள் மாற்றுருவில் புகுந்தான் வேழன். படையனைத்தும் திரட்டியணி வகுத்து நிற்கப் பணித்துப்பின் தன்னுட்டுக் கொடியை நாட்டித் தொடையுடுத்த மலர்மார்பன் அரிமா வன்ன தோற்றத்தன் முறுவலன்போர்க் கொடிஎ டுத்தான்; நடைதொடுத்த மூவகத்துப் படைஞ ரெல்லாம் நாவலத்துப் படைக்கெதிரிற் சற்றே அப்பால் படைதொகுக்கும் பாசறைகள் பலவ குத்துப் பாராளும் மதலையனைச் சூழ்ந்து நின்ருர். 365 இரவரசி நல்லாட்சி புரியுங் காலை ஏறனைய மாவேழன் அணுகி வந்து, புரவலனே! முரசறைந்து செருக்க ளத்துப் புகுமுன்னர்ப் பகைவலிகண் டறிதல் நன்ரும்; உரமுடைய இளவலையும் நேரிற் காணல் ஒருவகையிற் பயனுடைய செயலே யாகும்; கரவுடையில் பகைமுனையிற் சென்று நானே கண்டறிவல் விடை தருக" எனமொ ழிந்தான். 366 SSTTSTTSTTTTSTTTTS TTS TTTS தொடை-மாலை நடை-போர்ப்பயிற்சி சரவுடை-மாற்றுடை. அறிவல்-அறிவேன்,