பக்கம்:வீர காவியம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185

போர்ப் படலம்


திண்டோளன் திறலெல்லாம் மதலைக் கோமான் தெளிந்துணர்ந்தான் எனினுமவன் தனித்துச்செல்லின் கண்டாரும் துயர்விளைக்க நேரும் என்று கலங்கினய்ைத் துணையின்றித் தனித்துச் செல்வோய்! வண்டாரும் பூஞ்சோலை யன்று வீர! வட்கார்தம் உறைவிடத்துச் செல்லு கின்ருய்! பண்டாளும் செருக்கின்றி விழிப்போ டேகிப் படைத்தலைவ!வருக'வெனப் பணித்தான் மன்னன்.367 மாற்றலர்தம் வீரன்போல் உடைய னிந்து மாற்றுருவில் பகைப்புலத்துப் படைவெள் ளத்தில் ஏற்றுடலன் பிறரறியா தொளிந்து சென்ருன்; ஏந்தலுறை பாசறையை அறிந்து கொள்ள ஆற்றகிலான் ஒவ்வொன்றும் உற்று நோக்கி அரியேற்றின் உறைவிடத்தைக் கண்டு கொண்டான்; காற்றிலசை பாசறையின் திரையை நீக்கிக் கண்செலுத்திக் கூர்ந்ததனுள் நோக்கி நின்றன். 368 S S S S S S S S S S S S S S S S S S S S S S S S ST T T S T T S வட்கார்-பகைவர். ஏற்றுடலன்-ஏறுபோன்ற உடலுடையவேழன். Hol ந்தல்-கோளரி. ஆற்றகிலான் - முடியாமல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/188&oldid=911346" இலிருந்து மீள்விக்கப்பட்டது