பக்கம்:வீர காவியம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187

போர்ப் படலம்


'மறைந்தஞ்சிப் பதுங்கிவரும் வீரன் யாவன்? மறமிருப்பின் எதிர்நிற்க வெளியில் நீவா! கரந்திருக்கும் கோழைஎனில் பேசா தின்னே கடிதில்விரைந் தோடிவிடு! பேதாய்' என்ருன்; நிறைந்தவலி வேழனுக்குக் கோழை என்ற நெடுமொழிஓர் நெருப்பாகிச் சுடலும் தாவி அறைந்தவனை மார்பகத்து மோதித் தாக்க அப்பொழுதே இளவேலன் சாய்ந்து வீழ்ந்தான். 371 புறம்போந்த இளவேலன் இன்னும் இங்குப் போதருதல் புரிகிலனே! என்ளுே! என்று மறந்தோய்ந்த மாமல்லன் தேடு கென்று வயவருக்குப் பணியிட்டான்; தேடிச் சென்ருேர் நிறம்பாய்ந்த பேரடியால் குருதி சிந்தி நெடும்பினமாய்க் கிடந்தானைத் துரக்கி வந்தார்; அறந்தேய்ந்து போனதுவோ? இருளில் யாரும் அறியாமற் கொலைசெய்த வஞ்சர் யாரோ? 37.2 பழிநாணுச் செயல்செய்ய மூவ கத்துப் பாராள்வோன் ஏவியுளான்; இதற்கு நாளை வழிகான தவனைவிடேன்; வஞ்ச நெஞ்சன் வாய்விட்டுக் கதறும்வரை அடித்துக் கொல்வேன்; இழிவான செயல்செய்யத் துணிந்தான் பாவி!' எனமொழிந்தான் வெஞ்சினத்துக் காளை யன்னன்; விழிகாணு தொளிந்தங்கு வந்த வேழன் விரைந்தேகித் தன்னரசன் பாடி சேர்ந்தான். 373 _ இன்னே - இப்பொழுதே. மாமல்லன் - மற்போர்வல்ல கோளரி. யவர்-வீரர் நிறம் - மார்பு. குருதி - இரத்தம் பாடி-பாசறை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/190&oldid=911351" இலிருந்து மீள்விக்கப்பட்டது