பக்கம்:வீர காவியம்.pdf/193

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரெகாவியம் 190


இயல் 86 மாவேழன் பாசறையை வினவி நின்ற மகன்றனுக்கு வெண்கோடன் மறைத்துச் சொன்ஞன். சிறையிலுறும் கோடனைத்தன் னுடன் கொண் டேகிச் சேணுயரும் அரங்கேறிச் செம்மல் நின்று, நிறைகளிறு சூழவுயர் பாடி வீடும், நெருங்கியதன் வலப்பாலே நிமிர்ந்து நிற்கும் திரைவளையும் பாசறையும், அப்பால் ஓர்பால் செந்நிறத்த படைவீடும், சுட்டிக் காட்டிக் 'குறைவறவே எவ்வெவர்தங் கூட மென்று குறித்தெனக்கு விளங்கவுரை வீர இன்றே! 378 விடுதலைநீ வேண்டுதியேல் இதனைக் கூறு! விலங்ககற்றி உனைவிடுப்பேன்’ என்ரு ளுக, நெடுமுடியன் மதலைக்கோன் தங்கும் பாடி நீள்மருப்புக் களிறுபல சூழ்ந்த தாகும்; அடுதொழிலோன் பெருவீரன் வேங்கை என்பான் அதன் வலப்பால் தங்கியுளான் அமைச்சன் சான்ருேன் கெடுதலையே அறியாதான் நம்பி என்போன் கெழுமுவது செந்நிறத்த கூடம்' என்ருன். 379 கோடன் - வெண் கோடன். சேண் உயரும்- மிகவுயர்ந்த, செம்மல் - கோள ரி.