பக்கம்:வீர காவியம்.pdf/195

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

192


இயல் 87 வெண்கோடன் மறைக்கின்ற குறிப்பைக் கண்டு விடலையவன் பரியேறிச் சென்ருன் அங்கே. நம்பகிலாக் கோளரியன் சிறித தட்டி 'நயவஞ்சம் மொழிந்திடுவோய்! உண்மை கூறின் வம்புபடும் கலன்பலவாய்ப் பரிசில் கிட்டும்; வாய்மறைத்தால் நின்னுயிரே போகும்' என்ருன்; 'அம்புவிடு இப்பொழுதே! நின்பாற் சிக்கி அலமருமென் னுயிர்போக அஞ்ச கில்லேன்; வெம்புலியன் மாவேழன் பிழைத்தாற் போதும்; மேவலர்பால் தாயகத்தைக் காப்பேன்' என்ருன். 383 தந்தை பெயர் சொலக்கேட்டு நின்ற மீளி தனிப்பகைவெண் கோடனுக்கோர் தீங்கும் செய்யான், உந்திவரும் ஆர்வத்தால் கவசம் பூண்டோன் ஒப்பரிய வில்லேந்தி வாளுந் தாங்கி, முந்திவரும் நடைப்புரவி ஏறி, நண்ணுர் முனைப்புலத்துப் பசிய நிறப் பாடி நோக்கும் சிந்தையொடு மிகவிரைந்து சென்ருன் நேரில் சென்றங்கு மெய்ம்மையெலாம் தெரிவான் வேண்டி.384 --- வம்பு - புதுமை. கலன் - நகை, மீளி - கோளரி.