பக்கம்:வீர காவியம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

காட்சிப் படலம்

இயல் 4

மன்னவன் மொழியால் மனமிகப் புலந்து
பன்னரும் வேழன் படர்ந்தனன் பிரிந்தே.

ஆட்டாளுந் திறமில்லான் மதியு மில்லான்
      அரியணையில் அமர்தகவு மில்லா னேனும்
நாட்டாண்மை பெற்றிருந்தான் மதலைக் கோமான்;
      நடத்தையெலாம் பெயருக்குப் பொருந்தி நிற்கும்;
காட்டாளி வலிமைக்குக் காட்டாய் நின்று
      கருதலரை வெருவுறுத்தும் மாவே ழற்குக்
கூட்டாளி எனவிருப்பான் ஒருகால்; பின்னர்க்
      குணமாறிப் பகையாளி போல நிற்பான். 13

கூடுவதும் மாறுவதுந் தொழிலாக் கொண்ட
      சுொற்றவன்பாற் படைத்தலைவன் சினந்து தன்னுரர்க்
கோடுவதும் சான்ருேர்கள் சந்து செய்ய
      உளமிரங்கி மீளுவதும் வழக்க மாகும்;
ஏடுவிரி மலர்த்தொடையல் மார்பின் மன்னன்
      'என் பிழைக்கு வருந்துவல்யான்' என்று ரைக்கும்;
நீடுபுகழ்ப் பெருவீரன் நாட்டின் காதல்
      நெடிதோங்கி நின்றமையாற் குறையொ றுக்கும். 14

........................................
ஆட்டாளும் திறம் — நிருவகிக்கும் ஆற்றல்.ஆளி – யாளி
என்னும் விலங்கு, காட்டு – எடுத்துக்காட்டு. கருதலர் – பகைவர். சந்து - சமாதானம்.
தொடையல் – மாலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/20&oldid=1354171" இலிருந்து மீள்விக்கப்பட்டது