பக்கம்:வீர காவியம்.pdf/202

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199

போர்ப் படலம்


இயல் 93 மாவேழன் யாவனென வினவி நின்ற மகனிடமே உண்மைநிலை மறைத்தான் வேழன். 'மனமிரங்கி இனியவுரை தந்தாய்! உண்மை மறைப்பின்றி எனக்குணர்த்த வேண்டு கின்றேன்; முனமிருந்தே உயர்ந்தமறக் குடியின் வந்த மொய்ம்புடைய மாவேழன் யாவன்? தோளில் தினவுயர்ந்த அப்பெருமான் உறைதல் யாங்கோ? செய்தியிது தெரியுமவா மிகுதி கொண்டேன்; எனதுமனம் மகிழவரும் அண்ணுல்! சற்றே இளகியருள் புரிகவெனக் கெஞ்சி நின்ருன். 397 கெஞ்சுமுரை கேட்டிருந்த வேழன் ஆம் ஆம் கேட்டாரும் நடுநடுங்கும் வீரங் கொண்ட நெஞ்சுடைய மாவேழன் ஒருவன் உள்ளான்; நெடியவன்பாற் பயின்றவன் நான்; என்னை வென்று விஞ்சியபின் நீஅவனைக் காண லாகும்; விழைந்ததெது? நின்னுயிரா போரா?' என்ருன்; வெஞ்சமரன் வேழனிவன் என்ற எண்ணம் வீணுகித் தளர்ந்திளவல் போரே என்ருன். 398 தினவு உயர்ந்த-போ ர்ச்செருக்கு மிகுந்த