பக்கம்:வீர காவியம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

200


இயல் 94 போர்வேண்டா எனபtண்டும் சொன்னுன் வேழன் புலியளையான் இசைந்திலன்:போர் தொடங்கிற் றன்றே. "முகில் தழுவ நெடிதாக உயரக் கட்டி முடிந்துநிற்கும் கோபுரம் நான்; என்னைக் கண்டு திகில் தழுவ நிற்கின்ருேய்! நியோ கொட்டிக் கிடக்கின்ற செங்கலடா; சிறியோய் உன்னை உகிர்முனையால் வகிர்ந்தெனது விரல்க ளுக்கே ஒரு களங்கம் விளைவிக்க விழைய வில்லை; + துகிரனைய உன்னுடலைந் துண்டம் செய்யத் தோளுக்கும் வாளுக்கும் எண்ணம் இல்லை. 399 ஆதலினல் ஓடிவிடு வீடு நோக்கி அருஞ்சமரம் விட்டொழிக’ என்ருன் வேழன்; மோதலினல் உயிர்விடுவோர் யாவர் என்று முனைவதன்முன் முடிவுசெய விரைந்தாய் வீர! சாதலில்ை அஞ்சுமணம் உடைய வர்க்குச் சமரகத்து வேலை என்ன? உண்மை ஒன்றை ஒதினைநீ முடிந்துவிட்ட கோபு ரந்தான்; உன்கதையும் முடிந்ததென உணர்வாய் இன்றே. 400 உ கிர்-நசம் த கிர்-பவளம். சயர்-போர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/203&oldid=911379" இலிருந்து மீள்விக்கப்பட்டது