பக்கம்:வீர காவியம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203

போர்ப் படலம்


இயல் 96 தண்டும் வேலும் கொண்டுபோர் புரிந்தவர் தண்புனல் வேட்டுத் தனித்தனி ஒதுங்கினர். ஈட்டியினைத் தாங்கியவர் புரவி ஏறி இடப்பக்கம் வலப்பக்கம் மாறி மாறி வேட்டமுறு வேங்கையெனப் பொருது வந்தார்; வீரரெலாம் வியந்தஞ்சி ஒதுங்கி நின்ருர்: கோட்டைவிடும் இவனென்பர் ஒருசார் நின்ருர்; கொன்றுவிடும் அவனென்பார் மறுபால் நின்ருர்; காட்டலுறும் வலிமையெலாங் காட்டி நின்ருர் கையீட்டி வாய்பிளந்து நொறுங்கக் கண்டார். 404 தண்டெடுத்துக் கொண்டெழுந்தார் தாவித் தாவித் தாங்கரிய திறலோடு மோதி மோதிப் பண்டுரைத்த போர்முறைகள் அனைத்துங் காட்டிப் பரந்துபடத் துகளெழுப்பிக் கவச மெல்லாம் விண்டவற்றின் முகம்பிளக்க, உடல மெங்கும் எ/ 輯 ■ HH EI o வியர்வை'யாடு செங்குருதி கலந்து பாயக் கண்டதற்குந் தளராமல் உடன்று நின்ருர்; கடும்புரவி ஆற்ருமல் களைத்து நின்ற. 405 தண்டு-கதை என்னுங்கருவி. விண்டு-பிளந்து -- டன்று-சினந்து. நின்ற-நின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/206&oldid=911385" இலிருந்து மீள்விக்கப்பட்டது